தேர்தலுக்குப்_பின்_இவர்களின்_நிலை_என்ன...? #வாக்குச்_சேகரிக்கும்_பெண்_படலம் #தொலைபேசி_இலக்கம்_மாற்றப்படுமா...? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 24 December 2017

தேர்தலுக்குப்_பின்_இவர்களின்_நிலை_என்ன...? #வாக்குச்_சேகரிக்கும்_பெண்_படலம் #தொலைபேசி_இலக்கம்_மாற்றப்படுமா...?

தேர்தலுக்குப்_பின்_இவர்களின்_நிலை_என்ன...?
#வாக்குச்_சேகரிக்கும்_பெண்_படலம்
#தொலைபேசி_இலக்கம்_மாற்றப்படுமா...?
#மனைவியின் பெயரைக்கூட அவள் சகோதரர்களை உச்சரிக்க விரும்பாத இளைஞர்கள் இருந்த காலம் போய் இன்று. சந்திகளிலும், சந்தையிலும், பள்ளிக்கு முன்னாலும், கூட்டங்களிலும், மனைவிக்காக வாக்குச் சேகரிக்க மனைவியை பற்றி கூவித் திரியும் கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  

ஒரு சட்டத்தினால் நிட்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள் ஆனால் தேர்தலுக்கு பின்னால் இவர்கள் நிலை என்ன...?
உண்மையாகச் சொல்கிறோம் பெண் வேட்பாளர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. 
ஆதரிக்கிறோம் ஆனால் யாரை என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். 

உலகில் எத்தனையோ பெண்கள் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் தலைவர்களாகவும், புரட்சிகரமாகவும், வாழ்கிறார்கள்.
பெண் அடிமை, மறுக்கப்பட்ட கல்வி, அரசில், வன்முறை, என்று  இவைகளுக்கு எதிராக பல போராட்டங்களும் உலகில் நடந்தேறிய வரலாறுகளும் உண்டு. 
சாதித்தும் காட்டியிருக்கிறார்கள்.
 எமது பெண்களுக்கு. முன் உதாரணமாகவும் இருக்கிறார்கள். 
இவர்களுக்கு எதிராக அரேபிய ஊடகங்களோ,
சர்வதேச ஊடகங்களோ எந்தவொரு தப்பன கருத்துக்களோ, எதிர்மறையான கருத்துக்களோ வெளியிடவில்லை.

இன்று நியமிக்கப்பட்ட பெண்களே உங்களின் உண்மையான நிலமை என்ன...? 
நாட்டின் மாற்றப்பட்ட சட்டத்திற்காகவும், நிட்பந்தத்தாலும், காய் நகர்த்தலுக்காகவுமே தவிர. 

முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவோ, 
இல்லை ஒரு நகரின் மாற்றத்தை உண்டுபண்ணுவதற்காகவோ அல்ல. மாறாக நீங்கள் அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளுக்காக வெறும் பகடைக்காய்களாகவே பயன்படுதப்படுகிறிர்கள்  வேட்பாளர்களாக. 
உங்களை பப்பாசி மரத்தில் ஏற்றிவிட்டு மடுவும் தோண்டிவிட்டு, முட்டும் தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு பப்பாசி இலையின் நெட்டியால் முட்டுத்தருகிறார்கள்.
இறுதியில் முட்டி மோதி மூக்குடையப் போவது நீங்கள் மாத்திரமே...! 

ஒரு விடையத்தை நீங்கள் இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 

#உதாரணமாக...!
01_பெனாசிர் பூட்டோ ( பாக்கிஸ்தான்)
1988 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்தவர்.
பல திட்டங்களை கொண்டுவந்து சாதித்தும் காட்டியவர்.
பாக்கிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்றும், 56 முதுநிலைப் பட்டங்களும் பெற்ற பெனாசிர் பூட்டோ ஒரு இரும்புப் பெண்மணி.
சிந்தனையும், மன உறுதியும், கல்வியும், திடமான நம்பிக்கையுமே இவரின் வெற்றிக்கான காரணங்கள்.

02_ஷேக் ஹசீனா ( பங்களாதேஷ் ) 
தொடச்சியாக நான்கு முறை பிரதமராக இருக்கிறார்.
UN விருது பெற்றவர்.
தன்னுடைய நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையவைத்து பல புதிய திட்டங்கள் மூலம் நாட்டைக் கட்டியளுப்பி உலகளாவிய ரீதியில் பல விருதுகளையும் பெற்ற ஷேக் ஹசீனா ஒரு இரும்புப் பெண்மணி.

03_ஹினா றப்பானி கார் ( பாக்கிஸ்தான்)
இந்தியா மற்றும் மேற்கத்திய அரசியலுக்காகவும், சர்வதேச ஊடகங்களின் பிரபலத்துக்காகவும், பாக்கிஸ்தானை முஸ்லிம் ஜிஹாத் தீவிர நாடு என்று முத்திரை குத்தி அடக்குமுறைக்கு உட்படுத்த முனையும்போது இவைகளுக்கு எதிராகத் தன்னுடைய சிறு வயதில் புறப்பட்டாள் இந்த இரும்புப் பெண்மணி.
#இவளுடைய கொள்கையினாலும்,
சிறந்த திட்டமிடலினாலும் சர்வதேச நகர்வுகளை வெற்றிகரமாக நகர்த்தி வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்காக தன்னுடைய நாட்டு மக்களையே வழங்கினாள். 

04_மலாலா யூசுப் சாய் ( பாக்கிஸ்தான்)
05_ஷேக் மசாயா ( கட்டார் )
06_தௌகுல் கர்மன் ( எமன்)
07_ஹரியொன் வோல்கர் ( அமெரிக்கா)
08_இமான் ஆல்டிபி ( அமெரிக்கா)
09_சல்மா பிந்த் ஹிஷாப் அல் உதைபி.(சவூதி)
10_ஷேக் மோஷா ( கட்டார் ) 
இவர்கள் போல இன்னும் எத்தனையோ பெண்கள் இன்று தன் சமூக விடுதலைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும், பெண் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும், வர்த்தகத் துறை,  பத்திரிகைத்துறை, என்று போராடியும் இன்றும் போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். 
இவர்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும், ஒவ்வொரு சிந்தனைகளும் உலகமே ஏற்றுக்கொள்ளக்கூடியவாறே இருக்கிறது.

#ஆனால்_நீங்கள்....? 
அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்களா...?
உங்கள் பின்னனி என்ன...?
உங்கள் கொள்கை என்ன...?
உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம்தான் என்ன..?
நீங்கள் திடீர் என்று உருவாக்கப்பட்டவர்கள்.
உங்களிடம் தகமையோ, ஒரு அரசியல் சிந்தனையோ இல்லை.
ஹிஜாபில் இருந்து லெஜின்வெரைக்கும் எமது பெண்கள் சீரழிந்து இருக்கிறார்கள். இவை சார்ந்த அறிவு கூட உங்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக் குறியே..?

யாரோ ஒருவரின் சொல்லுக்கு ஆட்டிவைக்கும் பொம்மைகள் நீங்கள்.
இன்றய கல்வி ஒரு வர்த்தக மயமாக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சகோதரிகள் பேரூந்தில் கல்விக்காக வெளியூர் செல்கின்றனர் இவர்களுக்காக எழுத்து மூலமாகவோ அல்லது செயற்பாட்டிலோ, கருத்து மூலமோ ஏதாவது திட்டங்கள் உங்களிடம் உண்டா...?

முஸ்லிம் பெண்களின் மத்தியில் ஏற்பட்ட திடீர் நாகரீகத்தால் ஆடை இருந்தும் நிர்வாணமாக திரியும் பெண்களுக்கு. கலாச்சார ஆடைகள் அணிய ஏதாவது திட்டங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்களா...?

உங்கள் சகோதரிகள் எத்தனையோபேர் வீடி சுத்தி தன்னுடைய குடும்பத்தின் அடுத்தகட்ட தேவைகளை பூர்த்திசெய்துகொண்டு கறாமான முறையில் சம்பாதித்து வாழ்கிறார்களே இவர்களுக்கு ஏதாவது மாற்றுவழி உருவாக்கியிருக்கிறீர்களா...?
உங்கள் சிந்தனையில் ஏதாவது
 இருக்கிறதா...?

பாடசாலைகளில் உங்கள் சகோதர மாணவிகள் சிறந்த கழிவறை இல்லாமல் அவதிப்படுகிறார்களே அவர்களுக்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா...? 

எமது பிரதேசத்தில் பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் செல்லுகிறார்களே, முகவர்களாலும், கயவர்களாலும் நமது பெண்கள் பல இன்னல்களுக்கும், பாலியல் தொந்தரவுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்களே இவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்...?
 
எங்களுக்கு உங்களிடம் தனிப்பட்ட கோபமோ, பகையோ, குரோதமோ இல்லை.
ஆண்/ பெண் என்ற பாகுபாடும் இல்லை.
உங்கள் கொள்கைகளை வைத்தே எமது ஆதரவு.
 ஓட்டத்தில் சிறந்தது குதிரை என்று நாங்கள் நம்புகிறோம், பலத்தில் சிறந்தது யானை இதை நாங்கள் ஏறுக்கொள்கிறோம்.
அதேபோல உங்கள் எண்ணங்கள் செயற்பாடுகளும். 
தூய்மையானதாகவும், இறை அச்சத்திலும் சிறப்பாக இருந்தால் நிச்சயமாக உங்களையும் ஏற்றுக்கொள்வோம்.  

#எதை_முன்_வைத்து_நீங்கள்_மக்களிடம்_வாக்கு_கேட்பீர்கள்...?
01_ நிலை குலைந்த பேச்சை வைத்தா...?
02_உங்கள் சிரிப்பின் மூலமா...?
03_கவர்சி ஆடை அணிந்து வீதியில் உலா வருவதனாலா...?
04_தெரியதவர்களிடம் தெரிந்தவர் போல சிரிக்கும் சிரிப்பாலா...?
05_நீண்ட தொலைபேசி உரையாடலினாலா...?
06_வெட்கத்தினாலா...?
07_மார்க்கம் தெரிந்தும் வெகுளித்தனத்தினாலா...?
08_முகப்பூச்சி மூலமா...?
09_சக  அன்னிய ஆண்களுடன் சகஜமாக உரையாடலாம் என்று பெற்ற அனுமதியினாலா...?
10_உங்கள் தொலைபேசி இலக்கம், உங்கள் புகைப்படமும் போன்றன பிற ஆணின் போனுல் சேமிப்பில் இருப்பதனாலா...?

இந்த சமூகத்தில் இருந்து நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அல்ல நாங்கள் இவைகளை கேட்பது.
 எமது பிரதேசத்தில் உங்களை பற்றிய எந்த ஒரு கருத்தும் இல்லை.
 நீங்கள் கூட சமூகத்துக்கு சமூக மாற்றத்துக்காக எந்த ஒரு கருத்தும்  வெளிவந்ததாகவும் தெரியவில்லை.
 இதற்கு பிறகும் வருமா என்பது கேள்விக் குறியே தவிர வேறன்ன சொல்லமுடியும்..? 

பாடசாலையிலோ, குர்ஆன் அரபிக் கல்லூரியிலோ, வீட்டில் இருந்தோ, ஆக்கபூர்வமான கருத்து ஏதும் வெளியிட்டு இருக்கிறீர்களா...?
உங்களுக்கு எதிரில் வருகின்ற விமர்சனக் கருத்துகளுக்கு ஒரு ஆரோக்கியமான பதில் வழங்க உங்களால் முடியுமா...?
சரி சாதாரணமாக உங்கள் வீட்டில் ஏற்படுகின்ற கணவன் மனைவி பிரச்சினைகளுக்கு தீர்வை எடுக்கும் பக்குவமாவது உங்களிடம் உண்டா...?

இந்த பயணத்தில் இறங்கியிருக்கிறீர்கள்.

 ஆண்கள் பலமிக்க பாதை இது.
 பலதரப்பட்ட களம் இது.
எத்தனையோ வமர்சனங்கள்,அபதூறுகள் புழங்கும் இடம் இது.
புறாமை,கோபம், துரோகம் ஏமாற்றம் என்று எத்தனையோ சுற்றித்திரியும் அரசியல் எனும் சுழல் காற்றில் அறிந்தோ / அறியாமலோ நீங்கள் அகப்பட்டிருக்கிறீர்கள்.
நூறு வீதம் இப்படியான முடிவுள் உங்கள் சுய முடிவுகள் அல்ல.
 நீங்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களோ, பின் புலத்தில் இருந்து யார் உங்களுக்கு அனுமதி தந்தார்களோ அவர்களையும் இது சாரும்.

இந்தப் பயணத்தில் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், இன்னல்கள், பாலியல் தொந்தரவுகள், அவதூறுகள், போன்றவற்றை யாரிடமும் பங்கிட முடியாது.
பிறர் ஒப்பாரியாலோ, ஆறுதல் வார்த்தையிலோ தீர்த்துவிட முடியாது.

கோடிகணக்கில் செல்வங்களை கொட்டினாலும்.
 உங்களை முன்னிறுத்தியவர்களுக்கு/ அனுமதி தந்தவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் கொடுத்தாலும்.
ஒரு பெண் எதிர்நோக்கும் மேற்சொன்ன விளைவுகளை மாற்றவோ,தீர்த்துவைக்கவோ முடியாது.

( #பெண் என்பவள் ஒரு தாய்)
( #மதிப்பிட முடியாத ஒரு சொத்து )

இன்னும் உங்களுக்கு கலிகாலம் பிறக்கவில்லை.
இது பசுமையான ஒரு காலம் சிந்தியுங்கள் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுங்கள்.

இலங்கை முஸ்லிம்களுக்கன்று தனிக்கட்சி ஆரம்பித்து பவனிவலா வந்த அஸ்ரபின் மறைவுக்கு பின். 
மக்கள் செல்வாக்கு
அரசியல் செல்வாக்கு
உயர் பாதுகாப்பு
கட்சி தலைமைத்துவம்
செல்வமும்,கல்வியும்,
பல மொழிகளும், றாஜதந்திரமும்,
வெளிநாட்டு றாஜதந்திரிகளின் உறவுகளும்,
ஊடகங்களின் கண்காணிப்புகளும் இருந்து தன்னுடைய முன் அனுபவம் இல்லாத வழியில் பயணித்து இன்று எந்த செயற்பாடுகளும் இல்லாமல் எங்கோ இருக்கிறார். அன்னை பேரியல் அஸ்ரப்.

மனிதன் என்பவனின் சிறந்த அடையாளம் சிந்தனை.( சிந்தித்து செயற்படுங்கள் )
இவைகள் போதுமானது என்று நினைக்கிறேன். 
நன்றி...
Gafrufais...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages