கடற்குதிரை எடுத்து சென்றவர் கைது.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 25 December 2017

கடற்குதிரை எடுத்து சென்றவர் கைது.!

Image result for கடற்குதிரை
வில்­பத்து தேசிய வனப்­ப­கு­தியில் நடுவே அமைந்­துள்ள வீதியில் பய­ணித்த தனியார் பஸ் ஒன்றில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்டு செல்­லப்­பட்ட கடற்­கு­தி­ரைகள் உள்­ளிட்ட மேலும் பல கடல் வாழ் உயி­ரி­னங்­களின் பாகங்­க­ளுடன் ஒரு­வரை வலான மத்­திய குற்­றத் ­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை மாலை கைது செய்­துள்­ளனர்.  இவ்­ வீதி வழி­யாக மன்­னா­ரி­லி­ருந்து கற்பிட்­டிக்கு பய­ணித்துக் கொண்­டி­ருந்த பஸ்ஸில் வைத்தே இந் ­நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
குறித்த பஸ்ஸில் கொண்டு செல்­லப்­பட்டுக் கொண்­டி­ருந்த உரை­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான கடற்குதி­ரைகள், 292 சுறா மீன்­களின் துடுப்­புக்கள், விசேட வகை­யி­லான பெரும் எண்­ணிக்­கை­யி­லான சிப்­பிகள் உள்­ளிட்ட கடல் உயி­ரி­னங்கள் வலான மத்­திய குற்­றத் ­த­டுப்புப் பிரிவின் பதில் பணிப்­பாளர் ஹேமால் பிர­சன்ன தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போது  கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. 
வில்­பத்து வனப்பகு­தியின் மத்­தியால் செல்லும் பாதையின் ஊடாக தொடர்ந்தும் சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள் இடம்­பெற்­று­ வ­ரு­வ­தாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்தே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளது. வலான மத்­திய குற்­றத்­ த­டுப்பு பிரி­வின­ருக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்து அப்­பி­ரிவின் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் மாலை குறித்த வீதியில் வைத்து மேற்­கொண்ட நடவடிக்கையின் போது அவ்வீதி யால் பயணித்த சுமார் 20 வாகனங்கள் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா கத் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages