ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (22) பிற்பகல் மொரகஹகந்த திட்ட பிரதேசத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
தேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மொரகஹகந்த நீர் மின்சார நிலையத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், இந்நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.
நாட்டில் குறுகிய காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மின்சார நிலையமான மொரகஹகந்த நீர் மின்சார நிலையம் நான்கு டர்பைன்களின் ஊடாக மின்சாரத்தை உற்பத்திசெய்யக்கூடியது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்கொள்ளளவு 450000 ஏக்கர் அடிகளைக் கொண்டதாகும். இந்நீரின் சுமார் 93வீதமான அளவான 410000 ஏக்கர் அடி நீர் நிறைந்துள்ளதுடன், மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நீரை அடைந்ததும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
நாட்டின் விவசாயத்துறைக்கு புத்துயிரளிக்கும் வகையில் ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் சுமார் நான்கு தசாப்த காலமாக கவனிப்பாரற்ற நிலையிலிருந்த மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் முக்கிய பணியாக கருதி துரிதமாக முன்னெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் இப்பிரதேசத்திற்கு விஜயம்செய்த ஜனாதிபதி; பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
மொரகஹகந்த களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தின் பதில் பணிப்பாளர் டீ.பீ விஜேரத்னவும்; இதில் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment