கொழும்பு மாநகர சபை அடுத்தாண்டு ஆயிரத்து 500 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக ஆணையாளர் வீ.கே.ஏ.அனுர தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர அபிவிருத்திக்காக 460 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்மக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் ஆணையாளர் கூறினார்.
மாநகர சபையின் அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்;தை சமர்ப்பித்த பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கிடைக்கும் வருமானத்தை கொழும்பு நகர வாசிகள் மற்றும் நகரத்தை நாடும் மக்களின் நலன்கருதி பயன்படுத்தப்போவதாக மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment