விளம்பரத்தை பார்த்து ஏமாந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

விளம்பரத்தை பார்த்து ஏமாந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

போலி விளம்பரத்தை பார்த்து தான் ஏமாந்ததாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லி மேல்-சபையில் நேற்று நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவின் போது தெரிவித்தார்.விளம்பரத்தை பார்த்து ஏமாந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுபுதுடெல்லி:

டெல்லி மேல்-சபையில் நேற்று நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடந்தது. அப்போது அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு போலி விளம்பரத்தை பார்த்து தான் ஏமாந்தது குறித்து புலம்பினார்.

நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் ஒரு நாள் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் உடல் எடையை குறைக்கும் மாத்திரையை சாப்பிட்டால் உறுதியாக உடல் எடை குறையும் என கூறப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு மாத்திரைகள் குறித்து விசாரித்தேன். ஆயிரம் ரூபாய் செலுத்த சொன்னார்கள். பணத்தையும் செலுத்தினேன்.

ஆனால் மாத்திரைகள் எனக்கு கிடைப்பதற்கு பதிலாக ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், தேவைப்பட்டால் மற்றொரு மாத்திரையை வாங்கிக்கொள்ளுங்கள். அதுவும் ஆயிரம் ரூபாய்தான். விரைவாக உடல் எடை குறையும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு நான், முதல் மாத்திரையை அனுப்பினால்தான் 2-வது மாத்திரையை வாங்க முடியும் என தெரிவித்தேன்.

அதன்பின் இந்த விளம்பரம் மீது சந்தேகம் அடைந்து மத்திய நுகர்வோர் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானிடம் புகார் அளித்தேன். அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் டெல்லியை சேர்ந்தது இல்லை, அமெரிக்காவை சேர்ந்தது என்பது தெரியவந்தது.

இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாத வகையில் கடுமையான சட்டங்களும், போலியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages