காலநிலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 21 December 2017

காலநிலை

Related image
நாட்டுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடுமுழுவதிலும் வானம் முகில் கூட்டங்கள் நிறைந்ததாக காணப்படும் .
அத்துடன் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கமுடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு வடமத்திய கிழக்கு தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் .

மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யக்கூடும்.

கிழக்கு சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடம்பெறும்.

வடமத்தி மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மொனறாகலை மாத்தறை மாவட்டங்களிலும் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும்.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages