சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சோள‌ அடை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2017

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சோள‌ அடை

சோளத்தில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்ற உதவும். இன்று சோளத்தை பயன்படுத்தி அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சோள‌ அடை
தேவையான பொருட்கள் :

வெள்ளைச் சோளம் - 2 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
துவரம்பருப்பு - 1 கப்
உளுந்தம்பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 10
மிளகு - அரை டீஸ்பூன்

தாளிக்க :

வெங்காயம் - 2, 
எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை : 

வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் பொடித்த மிளகு, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான சத்தான சோள‌ அடை ரெடி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages