சாப்பிட்ட பின்பு செய்ய கூடாத சில விஷயங்கள்…. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 27 December 2017

சாப்பிட்ட பின்பு செய்ய கூடாத சில விஷயங்கள்….

உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நம்முடைய உடல் ஆரேக்கியத்திற்கு நல்லதல்ல. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.
Image result for tea test
உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. அவற்றை இங்கே பார்க்கலாம்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது நல்லதல்ல. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்..

சாப்பிடும் போதும், சாப்பிட்டு சில நிமிடங்களுக்கும் தண்ணீர் அருந்த வேண்டாம். உணவு ஓரளவு ஜீரணித்த பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.

அதேபோல், சாப்பிட்டவுடன் டீ குடிக்காதீர்கள். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு உண்டு.

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள். ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

சாப்பிட்டதும் குளித்தால், வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உண்டு. இதனால் செரிமானம் குறைவதுடன் வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளும் பாதிப்பு அடையலாம்.



சாப்பிட்ட உடனேயே ஓடுவது, வேகமாக நடப்பதும் கூடாது. அதேபோல் ஓய்வு எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு படுத்து தூங்கியும் விடக்கூடாது. பகல் உணவு சாப்பிட்டதும் அரை மணி நேரம் சாய்வாக உட்கார்ந்து ஓய்வு எடுத்து விட்டு, பின்பு வழக்கமான வேலையை கவனிப்பது நல்லது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages