உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உருளைக்கிழங்கு விதைக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியம் நூறு சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
தேயிலை மீள்ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின் கீர்த்தி நாமத்திற்கு தற்போது சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் தேயிலைக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தேயிலை மீள்ஏற்றுமதியை முற்றாகத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் மிளகு மீள்ஏற்றுமதியினால் மிளகின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தேசிய மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மிளகு மீள்ஏற்றுமதியையும் எதிர்காலத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment