கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 20, 21 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் என். நடராஜன் அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார். இதனையேற்று தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா செல்ல ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன
.
இந்நிலையில் புதன்கிழமை ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ராமபிரதீபன் தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு செல்லுவது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது..
இந்தக் கூட்டத்தில் தமிழக பொலிசார், இந்திய கடற்படை, கடலோர காவற்படை, சுங்கத்துறை, மத்திய, இந்திய மாநில உளப்பிரிவு, தமிழக கடலோர பாதுகாப்பு குழுவினா காவல்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், மீனவப் பிரநிதிகள், கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து கச்சத்தீவு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் ராமேசுவரம் வணகத்திற்குரிய பங்குத்தந்தை சகாயராஜ் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா பிப்ரவரி 20, 21 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன. இதனை விசைப்படகு மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாகவும், பயணத்திற்குரிய விசைப்படகுகளை வழங்க மாட்டோம் என கூறியுள்ளது தொடர்பாக விரைவில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி பயணத்திற்கு 100 விசைப்படகுகள் ஏற்பாடு செய்யப்படும். நாட்டுப்படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தங்களுக்குரிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். விலை உயர்ந்த நகை மற்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுத்து செல்லக்கூடாது. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் திருவிழாவிற்கு வர அனுமதி கிடையாது. பயணிகள் புகைப்படகருவிகள், மடி னணனி பொருட்களை எடுத்து வர அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்..
No comments:
Post a Comment