லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மலைப்பிரதேசங்களில் வெள்ளமும், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனியும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கலிபோர்னியா மாகாணத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேலையில் அங்குள்ள மலைப்பகுதியிலும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகளில் சேறு மற்றும் மண் சரிந்து மூடியது. நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் வசித்த 21 பேரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மணலில் புதையுண்டு உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கையில் கலிபோர்னியா காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை தொடர்ந்து வருவதையடுத்து வென்ச்சுரா கவுண்டியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment