வாஷிங்கடன்: இன்று காலையில் கரீபியன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு கரிபீயன் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. ஜமைக்கா மேற்குபகுதியில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு இரவு நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 1000 கி.மீ தொலைவுக்கு சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ, பொருளிழப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment