இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
\மேகமூட்டம் கடுமையாக இருப்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடல் திடீரென்று சீற்றத்துக்கு உள்ளாவது, காற்றின் வேகம் மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவது என்பது உள்ளிட்ட தன்மைகள் உருவாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பலப்பிட்டிய வரையிலான கரையோரப் பகுதியில் இந்த அறிகுறிகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் பணியாற்றும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இது குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment