நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ‘ஜி.பி.எஸ்.’ என்று அழைக்கப்படுகிற இருப்பிடம் காட்டுகிற கருவியை பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது
புதுடெல்லி:
நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ‘ஜி.பி.எஸ்.’ என்று அழைக்கப்படுகிற இருப்பிடம் காட்டுகிற கருவியை பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இது ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் இனி புதிதாக விற்பனை செய்யப்படுகிற வாகனங்களில்தான் ‘ஜி.பி.எஸ்.’ கருவி பொருத்த வேண்டுமா அல்லது இப்போது உபயோகத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், தனியார் வாகனங்களிலும் பொருத்திக்கொள்ள வேண்டுமா என்பது பற்றி தகவல் இல்லை.
பயணிகள் வாகனங்கள் என்கிறபோது ஆட்டோக்களிலும் ‘ஜி.பி.எஸ்.’ பொருத்த வேண்டுமா என்பது பற்றியும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் எதுவும் குறிப்பிடவில்லை.
No comments:
Post a Comment