2008ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இலங்கை அரசு போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. ராணுவத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கி போரிட்டதால் மனிதப் பேரழிவு ஏற்பட்டது. இந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்தி, பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்காக 2002ம் ஆண்டு ராணுவத்துக்கும், புலிகளுக்குமிடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது.
அதன்பின்னரும் இரு தரப்பு வீரர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 2008ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இலங்கை அரசு போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது. இதன் காரணமாக, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கை வன்முறையை அதிகரிக்கச் செய்வதுடன், அமைதி வழியிலான தீர்வு காண்பதை மேலும் கடினமாக்கிவிடும் என்று உலக நாடுகளும், ஐ.நா.வும் கவலை தெரிவித்தன. இந்த கருத்து நிரூபணமும் ஆகிவிட்டது.
போர் நிறுத்த உடன்படிக்கையை அதிரடியாக வாபஸ் பெற்றதன் விளைவாக 2009ம் ஆண்டு புலிகளின் மீதான உக்கிரமான தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டது. புலிகளின் போர் முகாம்கள் மட்டுமின்றி, தமிழர்கள் தங்கியிருந்த முகாம்கள் மீதும் குண்டுமழை பொழிந்தது ராணுவம். இதனால், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். அதன்பின்னர் போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாக அறிவித்தது.
இதேநாளில் நடந்த பிற நிகழ்வுகள் வருமாறு:-
1761 - ஆங்கிலேயர்கள் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்
1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
1991 - ஈராக் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும்போது, சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது கப்பலை வெடிக்க வைத்து 10 பேரும் இறந்தனர்.
2001 - காங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment