நாட்டின் பல பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஊவா மாகாணம் மறறும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிமான காற்று வீசக்கூடும்.
நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் எதிர்வரும் நாட்களில் காலைவேளைகளில் உறைபனிநிலவக்கூடும்.
மேற்கு , சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமான காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment