2018 டெட்ராயிட் ஆட்டோ விழாவில் புத்தம் புதிய ஜி-கிளாஸ் எஸ்.யு.வி. மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது
ஜெர்மனி:
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புத்தம் புதிய ஜி-கிளாஸ் எஸ்.யு.வி. மாடலை 2018 டெட்ராயிட் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் வரும் மாதங்களில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரயிருக்கிறது.
புதிய 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும் இருக்கிறது. இதனால் புதிய எஸ்.யு.வி. மாடலில் முந்தைய மாடலை விட அதிக இடவசதியும், சவுகரியமாகவும் இருக்கிறது. மேலும் இந்த எஸ்.யு.வி. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெட்ராயிட் மோட்டார் விழாவில் G500 வடிவில் மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டீசல் மாடல் மற்றும் சக்திவாய்ந்த AMG மாடல்கள் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் 2018 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய ஜி-கிளாஸ் மெர்சிடிஸ் போட்டியாளர்களை போன்று எலெக்ட்ரிக் வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. v
தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள G500 மாடலில் 47.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 416 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 610 என்.எம். டார்கியூ திறனை 2000 முதல் 4750 ஆர்.பி.எம். வழங்குகிறது. முன்பக்க ஆக்சில் தரையில் இருந்து 270 மில்லிமீட்டர் உயரத்திலும், பின்புற ஆக்சில் 241 மில்லிமீட்டர் உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சரிவுகளில் ஏறும் திறன் 100 சதவிகிதமாகவும், அதிகபட்சம் ஃபோல்டிங் டெப்த் 70 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லிமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பக்கம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வீல் ஆர்ச்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாகனத்தின் தோற்ரம் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது.
உள்புறத்தில் 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்.யு.வி. அதிக இடவசதி கொண்டிருக்கிறது. இத்துடன் மெர்சிடிஸ் E மற்றும் S-கிளாஸ் செடான்களில் காணப்படும் 12.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், கிராப்-ஹேன்டிள் உள்ளிட்டவற்றுடன் வழக்கமான மெர்சிடிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment