23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2018

23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம்

23 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துள்ளது.
Image result for 23 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம்


சென்னை:
நாட்டில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வந்தன. படிப்படியாக பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புழக்கத்துக்கு வந்துள்ளதுஇந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு, புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.50, ரூ.10 என புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி புதிய வடிவில் பல்வேறு வண்ணங்களில் அச்சடித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்போது, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய வடிவமைப்பையே புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் ஒத்திருந்தாலும், அடர் இளஞ்சிவப்பு பச்சை வண்ணத்தில் இருக்கின்றன.

10 ரூபாய் நோட்டு மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும். அதில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை இந்திய அரசே நேரடியாக வெளியிடும். அதில், மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த் தாசின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. நோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், நோட்டின் பின்புறத்தில் அச்சான ஆண்டு (2017) வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages