பீகார் ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 பெண் துறவிகள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் சாமியார் உள்பட 13 பேர் தப்பி தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் நவடா மாவட்டம் தாலி மோர் என்ற இடத்தில் சாந்த் குதிர் ஆசிரமம் உள்ளது. அங்கு தங்கி உள்ள 3 பெண் துறவிகள், போலீசில் பரபரப்பு புகார் அளித்தனர். ஆசிரம தலைவரும், சாமியாருமான தபஸ்யானந்தும், அவருடைய ஆட்கள் 12 பேரும் தங்களை கூட்டாக கற்பழித்து விட்டதாக அவர்கள் கூறினர்.
இதன்பேரில், போலீசார் மேற்கண்ட 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். 3 துறவிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமியார் தபஸ்யானந்தை தேடிச்சென்றபோது, அவரும், அவருடைய ஆட்களும் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரமத்துக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்திலும் பெண் துறவிகளை கற்பழித்ததாக தபஸ்யானந்த் மீது புகார் உள்ளது. கைதாவதில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து சாந்த் குதிர் ஆசிரமத்துக்கு வந்து தஞ்சம் அடைந்தார். தற்போது, இங்கேயும் கற்பழிப்பு வழக்கில் சிக்கி உள்ளார்.
No comments:
Post a Comment