மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவிகள் பரிதாபமாக பலியாகினர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவிகள் பரிதாபமாக பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்காட் மாவட்டத்தில் உள்ள தாகனு என்ற கடற்பகுதியில் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள தனியார் படகில் ஏறி சுற்றி பார்த்தனர். அப்போது திடீரென படகு கடலில் கவிழ்ந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். கடலோர காவல் படை அதிகாரிகளும், உள்ளூர் மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில் டோர்னியர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த தேடுதல் வேட்டையில் 32 பள்ளி மாணவர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 17 வயது மாணவிகளான சோனல் பக்வான் சுரதி, ஜான்வி ஹரிஷ் சுரதி மற்றும் சன்ஸ்க்ருதி மாயாவன்ஷி ஆகிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், மாயமான 5 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுற்றுலா படகில் சென்ற மாணவர்களுக்கு உயிர் காக்கும் கவசம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனாலேயே மாணவிகள் இறக்க நேர்ந்தது என தெரிவித்தனர்.
ஏற்கனவே, ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுடன் மாயமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 பேர் பலியானது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment