அந்தமான் தீவில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 15 January 2018

அந்தமான் தீவில் 4.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

புதுடெல்லி:
அந்தமான் தீவுகளில் நேற்று இரவு திடீரென 4.8 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அந்தமான் தீவுகளில் நேற்று இரவு 9.18 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் வீடு திரும்பினர். 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages