மும்பையில், ஓஎன்ஜிசி-க்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து, விபத்துக்கு உள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் சென்ற 4 பேர் பலியாகியுள்ளனர். 3 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
மும்பையில், ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணற்றின் கசிவை நீக்குவதற்காக, பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரில்- ஓஎன்ஜிசி ஊழியர்கள் 5 பேர், பைலட்டுகள் 2 பேர்- என சனிக்கிழமையன்று புறப்பட்டனர். ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கடைசியாக விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் 10.30 மணி வரை தொடர்பில் இருந்தனர். அதன்பிறகு அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டு, காணாமல் போயினர்.
No comments:
Post a Comment