ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதிக்கு செய்யப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேயிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக வழமை போன்று ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கு இலங்கை பெருந்தோட்டத்துறையினருக்கு தற்போது முடியும் என்று தேயிலை சபைக்குட்பட்ட தேயிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தொடர்பான விசேட ஆய்வாளர் கலாநிதி கீர்த்தி மோஹோட்டி தெரிவித்தார்.
இலங்கையின் தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக அந்நாட்டிற்கு பேச்சுவார்தை நடத்துவதற்காக சென்ற குழுவின் உறுப்பினர் இவராவார்.
இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவினால் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை 30 ஆம் திகதி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியில் ரஷ்யா பெருந்தொகை தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment