குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுசேர்க்கும் மசாஜ் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுசேர்க்கும் மசாஜ்

பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும்.
Image result for baby massage
பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும். உடல் எடை கூடவும், உடல் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

* மசாஜ் செய்வதற்குரிய எண்ணெய்யை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யத் தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.

* மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.

* இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.

* வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

* குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி லேசாக அழுத்த வேண்டும்.

* தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.
* தோள்ப்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.

* குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலைக் கொண்டு லேசாக நீவ வேண்டும்.

* குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக வருடிவிடுங்கள்.

* இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages