அரச சேவையை கட்டியெழுப்ப நடவடிக்கை - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 24 January 2018

அரச சேவையை கட்டியெழுப்ப நடவடிக்கை - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

அரச சேவையை கட்டியெழுப்ப நடவடிக்கை -  அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார
அரசியல் பழிவாங்கல் அற்ற அரசாங்க சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரச சேவை அரசியல் தலையீடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. அரச சேவையை வலுப்படுத்துவதன் மூலம் அரச நிர்வாகமும் வலுவடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய, அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு முதல் நிலவிவந்த ஓய்வூதிய சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால் அரச சேவைகள் சுயாதீனமாக இயங்குகின்றன. அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளிலும் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.

அக்ரஹார காப்புறுதி முறைமை ஓய்வூதியம் பெறுவோருக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. அரச சேவையிலிருந்து ஊழலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் தமது அமைச்சு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages