குழந்தையில்லை மருத்துவமனைக்கு வந்த பெண்கள்.! டாக்டர் கொடுத்ததோ டஜன் கணக்கான குழந்தைகள்! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 4 January 2018

குழந்தையில்லை மருத்துவமனைக்கு வந்த பெண்கள்.! டாக்டர் கொடுத்ததோ டஜன் கணக்கான குழந்தைகள்!

Image result for polite pregnant in islamic girl
ஹாலந்து நாட்டில் குழந்தை இல்லாத பெண்கள் டாக்டரிடம் சென்றபோது அவருடைய விந்தணுவை செலுத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாலந்து நாட்டில் ராட்டர்டாம் பகுதியில் ஜான் கார்பாத் என்ற டாக்டர் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்று நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு தன்னுடைய விந்தணுவை செலுத்தி டஜன் கணக்கான குழந்தைகளுக்கு தந்தையாகியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவர் அந்நாட்டில் செயற்கை கருத்தரிப்பு துறையின் முன்னோடி என்று தன்னை அழைத்துக் கொண்டவர் ஜான், இவர் மீது தற்போது பல பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கூறியதாவது: தன்னுடைய குழந்தை பழுப்பு நிற கண்களை உடையவனாக இருக்கிறான், மற்றொருவர் தன்னுடைய குழந்தை டாக்டரை போன்று அச்சு அசலாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார்.
இதனால் டாக்டர் மீது பெண்கள் பலர் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இது போன்று தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு கருத்தரிப்பு மையம் மூடப்பட்டது.
டாக்டர் 89வயதில் இறந்து போனார், அதன் பின்னர் அவரது வழக்கு தற்போது ராட்டார்டாம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜான் கார்பாத்தின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று டாக்டரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஒரு வேளை டாக்டரின் டிஎன்ஏ ஒத்துப்போனால் பல குழந்தைகளின் தந்தை என்று அழைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages