இலங்கையில் தமது நாட்டு முதலீடுகள் மாத்திரமன்றி முதலீட்டுக்கான பல முக்கிய திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை - சிங்கப்பூர் பிரதமர் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 24 January 2018

இலங்கையில் தமது நாட்டு முதலீடுகள் மாத்திரமன்றி முதலீட்டுக்கான பல முக்கிய திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை - சிங்கப்பூர் பிரதமர்

இலங்கையில் தமது நாட்டு முதலீடுகள் மாத்திரமன்றி முதலீட்டுக்கான பல முக்கிய திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை  - சிங்கப்பூர் பிரதமர்
இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதில் சிங்கப்பூரே முதல் முறையாக பேச்சுவாத்தைகளை நிறைவுசெய்திருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லூங் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக முடிந்ததை முன்னிட்டு தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக இலங்கைகான உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே சிங்கப்பூர் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை பொருளாதாரம் தாராளமயப்படுத்தலில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் சுற்றுலாத்துறையில் மேலதிக வர்த்தக முயற்சிகளை ஊக்குவிப்பில் கவனம் செலுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரதமர் இந்த உரையாடலுக்கு முன்னர் இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை கைச்சாத்திட்ட முதல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இதுவாகும் .

சிங்கப்பூர் ஊடகமான சனல்நியூஸ்ஏசியா செய்தி நிருபருக்கு இது தொடர்பில் சிங்கப்பூர் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில் ,

நான் எண்ணுகின்றேன் எமது வர்த்தக செயற்பாடுகள் அவர்களுடன் முரண்பட்டதாக இருக்காது . அவர்களுடன் வேறு வர்த்தகத்துறையுடன் பங்குதாரர்களாக செயற்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.இரு தரப்புகளிலும் செயற்படுவோருக்கு கடன் சலுகைகளை வழங்க வேண்டும் . பேச்சுவார்த்தைகள் 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

சிங்கப்பூரில் எதிர்க்கட்சி அல்லது ஏனையோர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சிங்கப்பூர் பிரதமர் ,

சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனமும் ஏனைய வர்த்தக சம்மேளனமும் பரந்துபட்ட நல்லெண்ணத்துடன் செயற்பட்டதுடன் போட்டித்தன்மையுடனான வர்த்தகமாகவே இதனை எடுத்து கொண்டனர்.

மேலும், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அவர்கள் இலங்கையில் கூடுதலான அணுகு முறைகளை மேற்கொள்ளயிருப்பதேயாகும்.
இலங்கை அரசாங்கமும் இதனை வரவேற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி மாத்திரம் அன்றி முதலீடுகளும் பாரியளவிலான முதலீட்டுக்கான திட்டமும் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த முதலீடுகளில் ஏற்கனவே பலர் ஈடுப்பட்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்வதாயின் பீறிமாவை சுட்டிக்காட்டலாம் . Hyflux or SembCor ஆகியன புதிய பங்குதாரர்களாவர் .

உணவுத்துறையில் சிங்கப்பூர் பாரிய நிறுவனங்களை கொண்டு இருக்கவில்லை. இருப்பினும் இலங்கையில் இவ்வாறான நிறுவனங்கள் தனது நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று குறிப்பிட்ட அவர் இவையே சுதந்திர வர்த்தக நடவடிக்கையில் சாதகமான பலன் என்றும் கூறினார்.

சிங்கப்பூரை பொறுத்தவரையில் எமது சந்தை பகிரங்க தன்மையை கொண்டது. எமது மக்கள் மற்றும் நிறுவனங்கள் சர்வதேச போட்டி சவால்களை எதிர்கொள்ளவார்கள் என்று நான் நினைக்கின்றேன் என்றும் சிங்கப்பூர் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages