வடகொரியா நடத்திய ஏவுகண சோதனை தோல்வி: சொந்த நாட்டிலேயே விழுந்து விபத்து - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

வடகொரியா நடத்திய ஏவுகண சோதனை தோல்வி: சொந்த நாட்டிலேயே விழுந்து விபத்து

Image result for வடகொரியா நடத்திய ஏவுகண சோதனை]

பையோங்க்: வடகொரியா நடத்திய ஏவுகண சோதனை தோல்வி அடைந்து தனது சொந்த நாட்டிலேயே விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வடகொரியா கடந்த ஆண்டு பங்சாங்க் என்ற ஏவுதளத்தில் ஹவ்சாங்க்-12 என்ற ஏவுகணையை சோதனை செய்தது. விண்ணில் பாய்ந்த அந்த ஏவுகணை 24 மைல் தொலைவில் சென்ற போது திடீரென வடகொரியாவின் குடியிருப்பு பகுதி உள்ள டோக்சான் என்ற நகரில் விழுந்தது பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக இணைய தள செய்தி பத்திரிகைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், கடந்த வாரம் கூகுள் எர்த் மூலம் டோக்சான் நகரை தேடிய போது முன்னர் இருந்த பல கட்டிடங்கள் இப்போது இல்லை எனவும் தெரியவந்துள்ளது. வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா விதித்துள்ள நிலையில் மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages