கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்தளை பகுதி நோக்கி வாகனங்கள் வெளியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.
உத்தேச புதிய களனி பால நிர்மாணப் பணிகளுக்காக இந்த இரு வெளியேறும் பாதைகளும் இவ்வாறு மூடப்படுவதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டது.
அதன்படி இன்று முதல், கட்டுநாயக்க அதிவேக பாதை ஊடாக களனி, பேலியகொடை பகுதிகளுக்குள் வருவதற்கு பேலியகொடை வெளியேறும் பாதையை பயன்படுத்தி A1 கொழும்பு – கண்டி பிரதான வீதிக்குள் நுழைய வேண்டும்.
அதேபோன்று அதிவேக பாதையில் இருந்து வத்தளை, பேலியகொடை பகுதிகளுக்கு வெளியேறி செல்வதற்காகவும் பேலியகொடை வெளியேறல் பாதையைப் பயன்படுத்தி கொழும்பு - நீர்கொழும்பு A3 வீதிக்குச் சென்று பயணிக்க வேண்டும்.
எனினும் கட்டுநாயக்க அதிவேக பாதையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்க வழமை போன்றே செல்ல முடியும் எனவும் இந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை சாரதிகள் பயணிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.
No comments:
Post a Comment