ரோமானியா பிரதமர் மிஹாய் டுதோஸுக்கு அளித்து வந்த ஆதரவை ஆளும் கட்சி திரும்ப பெற்ற நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புச்சாரெஸ்ட்:
ரோமானியா பிரதமர் மிஹாய் டுதோஸுக்கு அளித்து வந்த ஆதரவை ஆளும் கட்சி திரும்ப பெற்ற நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடான ரோமானியாவில் மிஹாய் டுதோஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமராக பொறுப்பேற்றார். சமூக ஜனநாயக கட்சியின் நீண்டகால உறுப்பினராக உள்ள டுதோஸ் மீது கட்சி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு நடத்தி டுதோஸுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, டுதோஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். துணை அதிபர் பால் ஸ்டானெஸ்கு தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment