நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் இருக்கும் பொருள் பாதுகாப்பு அறை, லாக்கர் வசதிகளை நவீனப்படுத்தி அதன் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது
புதுடெல்லி:
நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் இருக்கும் பொருள் பாதுகாப்பு அறை, லாக்கர் வசதிகளை நவீனப்படுத்தி அதன் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பொருள் பாதுகாப்பு அறை, லாக்கர் வசதிகள் உள்ளன. இதில், பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரத்துக்கு 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. லாக்கருக்கு முதல் 24 மணி நேரத்துக்கு 20 ரூபாய் கட்டணமாகும். அதன் பிறகு அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு தலா ரூ.30 கட்டணமாக உள்ளது.
இனி இந்த ரெயில்வே பாதுகாப்பு பெட்டக அறையும், உடமைகள் பாதுகாப்பு அறையும் முழுமையாக கணினி வசதி செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் அங்கு வைக்கப்படும் பொருள்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் சேவைத் தரத்துக்கு ஏற்ப கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.
இந்தக் கட்டணங்கள் ரெயில் நிலையங்களுக்கு ஏற்ப மாறுபடும். பயணிகள் போக்குவரத்தும், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகம் உள்ள ரெயில் நிலையங்களில் அங்கு செய்து தரப்படும் கூடுதல் இடவசதி, பாதுகாப்புக்கு ஏற்ப கட்டணம் அதிகமாக இருக்கும்.
இந்தக் கட்டணங்கள் அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவேளையில் மாற்றி அமைக்கப்படும். இந்த வசதிகளை செய்து தரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக டெண்டர் விடுக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிகள் மிகவும் வெளிப்படையாக நடைபெறும் என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment