கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 January 2018

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள்

Image result for கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள்


கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
 
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல்  தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
 
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்  போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக்  குடிக்கலாம், விரைவில் குணமடையும்.
 
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும்  செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
 
இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது  நல்லது.
 
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை  பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
Related image
 
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
 
கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை  வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages