மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை...! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 January 2018

மருத்துவ குணங்கள் நிறைந்த கரிசலாங்கண்ணி கீரை...!

Related image
கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் பயன்படுத்தலாம். இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன.
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.  
 
மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு  நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம்  இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
 
கண், முகம், வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில்  சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.
 
இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள்  பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும். இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெளியேறிவிடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages