பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பட்டாபிராம்-திருநின்றவூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Image result for train in chennai
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, 11.25, 1.05 மணி ரெயில்கள் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.



வேளச்சேரி-திருவள்ளூர் காலை 9.05 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயில்கள் இன்றும், கடற்கரை-திருவள்ளூர் காலை 9.50 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.



மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 9.10, 11.05, 12.50 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.45 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி காலை 10, 11.45 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் காலை 10.30, மதியம் 12 மணி மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, நெமிலிச்சேரி ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.



திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.05, 12 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 9.40 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் காலை 10.50, 12 மணி, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் மதியம் 1.40 மணி ரெயில்கள் 2 நாட்களும் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.



ஆவடி-வேளச்சேரி காலை 8.45, 12.10, 2.40 மணி, சூலூர்பேட்டை-வேளச்சேரி காலை 7.25 மணி, பட்டாபிராம்- வேளச்சேரி காலை 8.45 மணி, கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருத்தணி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05, 1.40 மணி, கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி ஆகிய மின்சார ரெயில்கள் இன்று கடற்கரை-வேளச்சேரி இடையே ரத்துசெய்யப்பட்டுள்ளது.



வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15, 2.45 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் மதியம் 12.55 மணி, வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி, வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி, வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி மதியம் 2.55 மணி ஆகிய மின்சார ரெயில்கள் இன்று வேளச்சேரி- கடற்கரை வரை பகுதியாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.



கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் இரு மார்க்கத்திலும் இன்று காலை 9.35 மணி முதல் மாலை 4 மணி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.கடற்கரை-வேளச்சேரி ரெயில் நாளை காலை 9.40 மணி முதல் மாலை 4 மணி வரையும், வேளச்சேரி- கடற்கரை ரெயில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரையும் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages