அடுக்கு மாடி செர்த்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

அடுக்கு மாடி செர்த்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

நிலப்பற்றாக்குறைக்கு ஏற்றதாகவும் குறைவான தரைப்பரப்பில் அடுக்கமாடிகளை அமைக்கக்கூடியதாக இருப்பதினால் அடுக்கு மாடி வீட்டுத்திட்டம மன்னெடுக்கப்பட்டுவருவதாக அடுக்குமாடி சொத்துக்கள் தொடர்பான அதிகார சபைத்தெரிவித்துள்ளது.


இதனால் கடந்த சில வருடங்களில் அடுக்கு மாடிகளின் சொத்துக்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர். கே.ஜயவீர தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது இவ்வாறான 65, 509 சொத்துக்ககள் இருப்பதாக குறிப்பிட்ட பொதுமுகாமையாளர் மேலும் 20 ,438 அடுக்கு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு உட்பட்ட அடுக்குமாடி சொத்துக்கள் தொடர்பான அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர். கே.ஜயவீர கொழும்பில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார். சொத்துக்கள் தொடர்பான சட்ட விதிகள் குறித்து அரசாங்க அத்காரிகளுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் அரசாங்கத்திற்கு உட்பட்டதாக 39, 335 அடுக்குமாடி சொத்துக்களும் தனியார் துறைக்கு உட்பட்டதாக 22, 425 அடுக்குமாடி சொத்துக்களும் கடற் பேரலை சுனாமி தாக்கத்தின் போது இருந்த 3, 745 அடுக்குமாடி சொத்துக்களுமாக மொத்தமாக 65, 509 அடுக்குமாடி சொத்துக்களும் இருந்ததாக குறிப்பிட்ட பொது முகாமையாளர் ஆர். கே.ஜயவீர கடந்த சில வருடங்களில் மாத்திரம் மேலும் 20, 438 அடுக்குமாடிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages