பதுளை மாவட்ட பாடசாலை அதிபர் முறைப்பாடு குறித்து உடனடி விசாரனை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 January 2018

பதுளை மாவட்ட பாடசாலை அதிபர் முறைப்பாடு குறித்து உடனடி விசாரனை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Image result for ஜனாதிபதி உத்தரவு

ஊவா மாகாண முதலமைச்சர் பதுளை மாவட்ட வித்தியாலய அதிபர் ஒருவரை தொல்லைக்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். 
ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்கவினால் பதுளை மாவட்டத்தில் உள்ள வித்தியாலய அதிபர் ஒருவரை கொடுமைப்படுத்தியதாக தெரிவிக்கப்படும் தகவல் மற்றும் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய பக்கச்சார்பற்ற விரிவான விசாரணையை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேபோன்று இந்த விசாரணையை பக்கச்சார்பற்ற வகையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சின் பணிகளை மாகாண ஆளுநர் கீழ் கொண்டுவருமாறு ஜனாதிபதி, ஊவா மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் எத்தகைய சட்டவிதிகளையும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages