பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய வைபவம் இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு இசிப்பத்தன வித்தியாலத்தில் இன்று இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், மேல்மாகாண பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தேசிய வைபவம் கொழும்பு பாத்திமா கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இதுவரையில் பாடசாலைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கு பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 38 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் படைவீரர்களின் ஐந்து பிள்ளைகள் என்ற வீதத்தில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.இது தொடர்பிலான பெயர்ப்பட்டியலை பாதுகாப்பு அமைச்சு கல்வியமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது. இவை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment