ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் நீண்டகால பனிப்போர் தேர்தல் பெறுபேறுகளுடன் வெடிக்க ஆரம்பிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும் பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் நீண்ட காலமாக அதிகார பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. பிரதமர், ஜனாதிபதியை முந்திக்கொண்டு அரசாங்கத்தின் பிரதான அதிகாரமுடையவராக செயற்பட முயற்சிக்கின்றார். அதேபோன்று ஜனாதிபதியும் பிரதமரை முந்திக்கொண்டு அரசாங்கத்தின் அதிகாரங்களை செயற்படுத்த முயற்சிக்கிறார். இதன் பிரகாரம் பிரதமர் பாராளுமன்றத்தினூடாக அரசாங்கத்தின் சில அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவந்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்றுவரும் இந்த பனிப்போரானது நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் வெடிக்க ஆரம்பிக்கும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது எமது கடமையாகும். இதன்மூலம் இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டம் வெளிப்படும். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பாரியதொரு தோல்வி ஏற்படுவது உறுதியாகும். இதனால் நாட்டுக்குள் பாரிய அரசியல் குழப்பம் ஏற்படுவது யதார்த்தமாகும்.
மக்களின் ஆணையில்லாத அரசாங்கம் என்ற போராட்டத்தை மக்கள் நாடுபூராகவும் மேற்கொள்வதை தவிர்க்க முடியாமல்போகும். இதன்மூலம் இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்படும். ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் இடம்பெறும் அதிகார போராட்டமும் இதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. இந்த அதிகார போராட்டத்தின் மற்றுமொரு அங்கமாகவே ஜனாதிபதி தனது பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றில் வினவியது.
ஜனாதிபதி தனக்கு 6 வருடங்கள் பதவியில் இருக்கலாமா என்றுதான் உயர் நீதிமன்றில் கேட்டிருந்தார். ஜனாதிபதிக்கு இதனை 6 வருடங்களாக்கும் தேவை இருந்தது. அதேபோன்று பிரதமருக்கு இதனை 5வருடத்துக்கு வரையறுக்க தேவையாக இருந்தது. ஏனெனில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்கள் என தீர்ப்பானால் பாராளுமன்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதியின் காலம் 5 வருடங்கள் என தீர்ப்பானால் ஆரம்பமாக ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி ஜனாதிபதியை பிரச்சினைக்கு உட்படுத்த வேண்டிய தேவை பிரதமருக்கு இருந்தது. அதற்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேவை ஜனாதிபதிக்கு இருந்தது. இந்நிலையிலேயே உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தில் 5 வரு டங்களே பதவி வகிக்கலாம் என தெரிவித்துள் ளது. இதனால் அரசாங்கத்துக்குள் எதிர்வரும் தினங்களில் மேலும் அதிகாரப் போராட்டம் வலுவடையும் என்றார்.
No comments:
Post a Comment