பாரிய ஊழல், மோசடி, அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் மற்றும் உரிமைகளை முறையற்ற விதத்தில் உபயோகித்தல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திலஇடம்பெற்றது.
1135 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் பீ.பத்மன் சூரசேனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு.குணதாச மற்றும் ஏனைய அங்கத்தவர்களான விக்கும் களுஆரச்சி, ஆர். ரணசிங்க, கிஹான் குலதுங்க, பீ.ஏ. பிரேமதிலக்க ஆகியோரும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment