இரான் போராட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவை கூட்டுவதா? அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

இரான் போராட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவை கூட்டுவதா? அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா

Image result for இரான் போராட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவை கூட்டுவதா? அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா
இரானில் நடந்து வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழுவை அமெரிக்கா கூட்டியிருப்பதை ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.
உள்நாட்டு விவகாரத்தில் பாதுகாப்புக் குழுவை ஈடுபடுத்தியிருப்பது ஐ.நா. அமைப்பின் மாண்மை சிதைத்திருப்பதாக இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாசிலி நெபென்சியா கூறினார்.
வீரம்செறிந்த மக்களின் பலமான வெளிப்பாடு என்று அந்தப் போராட்டத்தை சில நிமிடங்களுக்கு முன்புதான் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி புகழ்ந்திருந்தார்.
பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர் என்ற தமது நிலையை அமெரிக்கா தவறாகப் பயன்படுத்திவருவதாக இரானுக்கான ரஷியத் தூதர் தெரிவித்தார்.
டிசம்பர் இறுதி வாக்கில், இரானில் தொடங்கிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான இந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் பல நகரங்களுக்குப் பரவி அரசெதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்தது.
இப்போராட்டங்களில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அரசுக்கு ஆதரவான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவமான புரட்சிகரக் காவல்படை அறிவித்தது.
உள்நாட்டு விவகாரத்தில் பாதுகாப்புக் கவுன்சிலை கூட்டியதற்காக பல நாடுகள் அமெரிக்காவை விமர்சித்தன.

இரானில் அரசுக்கு ஆதரவாக நடந்த ஒரு போராட்டம்படத்தின் காப்புரிமைREUTERS
Image captionஇரானில் அரசுக்கு ஆதரவாக நடந்த ஒரு போராட்டம்.

உலகின் பார்வையில் அமெரிக்கா தார்மீக, சட்டபூர்வ, அரசியல் உரிமையை இழந்து நிற்பதாக ஐ.நா.வுக்கான இரான் தூதர் கோலமலி கொஷ்ரூ அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages