சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய பெருமக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வந்த ஹஜ் பயணத்திற்கான மானியத்தை சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும், சிரமமும் ஏற்படுத்துவதற்காக வேண்டும் என்றே பழிவாங்கும் உள்நோக்கத்தோடு நரேந்திரமோடியின் மத்திய பா.ஜ.க. அரசு குறிவைத்து இத்தாக்குதலை தொடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டிக்கிறேன். எப்போதும் போல் தொடர்ந்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பிலும், தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணியின் சார்பிலும் நாளை (18-ந் தேதி) காலை 10.30 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தொல்லை தருவதையும், புனித ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்யப்பட்டதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment