U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வெல்லிங்டன்:
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. இன்றைய தினம் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ‘டி’ பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தியா அணி: பிரித்வி ஷா (கேப்டன்), ஷுப்மன் கில், மன்ஜோத் கல்ரா, ஹிமன்ஷு ரானா, அபிஷேக் ஷர்மா, ஆர்யன் ஜுயல், அன்குல் சுதாகர் ராய், கம்லேஷ் நகர்கோட்டி, ஷிவம் மாவி, ஷிவா சிங், இஷான் பொரெல்
அஸ்திரேலியா அணி: மேக்ஸ் பிரயண்ட், ஜாக் எட்வர்ட்ஸ், ஜேசன் சங்கா (கேப்டன்), ஜொனதன் மெல்ரோ, பரம் உப்பல், பக்ஸ்டர் ஹோல்ட், ஆஸ்டின் வாக், வில் சுதர்லாண்ட், சேவியர் பார்ட்லெட், ஜேசன் ரால்ஸ்டன், லையாட் போப்
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பிரித்வி ஷா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மன்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 32 ரன்களுடனும், கல்ரா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment