இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்தப் போட்டி டாக்கா ஷெர்-பங்ளா மைதானத்தில் நடைபெறுகின்றது.
இது நிச்சயமாக வெற்றி-தோல்வியைத் தரும் போட்டியாக அமையக்கூடும் என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மைதானத்தின் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையுமெனத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment