கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தின் தேவ ஆராதனை இன்று - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 24 February 2018

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தின் தேவ ஆராதனை இன்று

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தின் தேவ ஆராதனை இன்று

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தின் தேவ ஆராதனை இன்று இடம்பெறவுள்ளது.

45

தேவாயலத்தின் கொடியேற்ற நிகழ்வு நேற்று இடம்பெற்றது. தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கொடிமரத்தில் கோயில் நிர்வாகக்குழுவின் பங்குத் தந்தை யமீன் பவுல்ராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய இலங்கை பக்தர்கள் இணைந்து சிலுவையை சுமந்து வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் புனித அருளானந்தரின் தேர்ப் பவனியும் சிறப்புத் திருப்பலியும் நடந்தன.
இந்த திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவுக்கு தமிழகத்திலிருந்து 62 படகுகளில் 1920 பேர் வருகை தந்திருந்தனர்.

யாழ். மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் அடிகளார் தேவ ஆராதனையை நடத்தவுள்ளார்.

தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஆராதனை இடம்பெறவுள்ளது. முதன்முறையாக இம்முறை சிங்கள மொழியில் தேவ ஆராதனை இடம்பெறவுள்ளது.

உற்சவத்தில் கலந்து கொள்ளும் இலங்கை, இந்திய அடியாளர்களின் நலன்கருதி சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.,

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages