தண்டனையும் நெறிப்படுத்தலும்
-----------------------------------
"நம் கல்வி உருவாக்க வேண்டியது, அஞ்சி ஒழியும் பிரஜையை அல்ல, வலிமை, சுய கட்டுப்பாடு, ஆளுமை, தலைமைப் பண்பு மிக்க இளைஞர்களை"
-டாக்டர் ஏ.பீ.ஜே. அப்துல் கலாம்.
மாணவர்களைத் #தண்டித்தல் வேறு, அவர்களை #நெறிப்படுத்தல் வேறு.
1) ஒரு குழந்தையை முழுமையாகக் கட்டுப்படுத்தி வைக்க #தண்டித்தல் முறை முயற்சி செய்கிறது. #நெறிப்படுத்தலோ அந்தக் குழந்தையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து, அக்குழந்தையை சுய கட்டுப்பாடு கொண்டவராக மாற்ற உதவுகிறது.
* சில ஆசிரியர்கள், குழந்தைகள் தங்களாகவே அமைதியாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் #அமைதி என்று கட்டளை இட்டால் அமைதியாக இருக்க வேண்டும். அதன் பிறகும் அமைதியைக் கடைப்படிக்கா விட்டால் அவர்கள் என் வகுப்பறைக்கே லாயக்கு அற்றவர்கள். இவர்களுக்கு பாடசாலையே தேவையில்லை. என்று நினைக்கிறார்கள்.
2) #தண்டித்தல், தான் செய்த தவறைத் தொடர்ந்தும் குழந்தைகளை ஞாபகம் வைத்துக் கொண்டே இருக்குமாறு செய்து விடுகிறது. #நெறிப்படுத்தல் தவறை மட்டும் சுட்டிக் காட்டுவதல்ல. மாற்று வழியை ஒரு குழந்தை தானே தெரிவு செய்து அந்தத் தவறை நொடியில் கடந்துவிட உதவுவதே ஆகும்.
3) #தண்டித்தல் ஒரு குழந்தை தனது சுய மரியாதையை இழந்து கூனிக் குறுகிப் போக வைக்கிறது. #நெறிப்படுத்தலோ நம்பிக்கை அளித்து அச் செயலின் பின் விளைவுகளை ஆராய்ந்து தவறைக் கைவிட உதவுகிறது.
4) #தண்டித்தல் ஒருவகைத் தொடர் வன்முறையாகவும், வெறுப்பை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. #நெறிப்படுத்தல் நபர்கள் மீது கவனங் கொள்ளாமல் நடத்தையைச் சீர் செய்வதில் கவனங் கொள்வதால் இந்த ஆபத்து அதில் இல்லை.
5) #தண்டித்தல் தவறான நடத்தையை சீர் செய்வதில்லை. மாறாக அதைத் தண்டிப்பவர் (ஆசிரியர்) பார்க்கும் போது தவிர்க்கப் பழக்குகிறது. தவறைத் தற்காலிகமாகவே அது நிறுத்தும். #நெறிப்படுத்துதல் அந்த நடத்தையினால் வரும் தீங குகளைப் பேசி உணர வைத்து மீண்டும் #நிகழாமல் தடுக்கும்.
6) #தண்டிப்பது சமயத்தில் குழந்தையின் தவறை விட பெரிய குற்றமாகி விடுகிறது. பாரபட்சம் பார்க்கத் தூண்டுகிறது. #நெறிப்படுத்தல் தவறுகளைத் திருத்தும் ஆற்றுப்படுத்தலாக (counseling) இருப்பதால் அது போற்றத்தக்க செயலாகும்.
ஏ.எல். நௌபீர்.
உசாத் துணை :
வன்முறையில்லா வகுப்பறை
Post Top Ad
Tuesday, 24 July 2018
தண்டனையும் நெறிப்படுத்தலும் - ஏ.எல். நௌபீர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment