நீ ஒரு சுயநலக்காரி - மருதமுனை விஜிலி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

நீ ஒரு சுயநலக்காரி - மருதமுனை விஜிலி

நீ   ஒரு சுயநலக்காரி
......................................

ஊரடங்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும்
என் கனவுகளை உடைத்துக் கொண்டு
எனக்குள் நீ முகாமிட்டிருந்தாய்.

அப்போது என் முணுமுணுப்புக்களால்
உன்னை எழுதிக்கொண்டிருந்தேன்.
என் வார்த்தைகள் வசப்படாமலே
தள்ளாடிக்கொண்டிருந்தது.

எல்லா இராப்பொழுதுகளையும்
என் தலையில் சுமந்து கொண்டிருந்தேன்
என் இதய அறையில் உன்னை 
உறங்க வைப்பதற்கு.!

என் அறை முழுவதும்
நீ அனுப்பிய கடிதக்கீறல்கள்
சாட்சிகளாய் என் கனவைக் கலைத்தன.

ஊறுகாய்தொட்ட நாவின் ருசிபோல
எனக்குள் ஊறிக்கொண்டிருந்தாய்.
ஒருகோடி நட்சத்திரங்களை விடவும்
மின்னிக்கொண்டிருந்தது
உன் ஒரு துண்டு மூக்குத்தி.

போ..
நீ ஒரு சுயநலக்காரிதான்
ஏனென்றால்-
நிலாப்பூக்கள் நிரம்பிய இரவில்
நீ மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாய்.!
என் உணர்வுகளைத் தவிக்கவிட்டு.!!

---மருதமுனை விஜிலி.--

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages