இன்னும் என்னதான் நாடுகிறாய் - ஏ.எல்.தவம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

இன்னும் என்னதான் நாடுகிறாய் - ஏ.எல்.தவம்

இன்னும் என்னதான் நாடுகிறாய் ........
ஏ.எல்.தவம்

கனவுகளை திருடி
கண்ணையும் பறித்தாய்
என்னை நோக - இனி
என்னதான் இருக்கிறதோ

இன்னும் வதைக்க
எதைத்தான் விட்டு வைத்தாய்

எல்லாமே போய்ட்டு
என் இதயமும் காய்ந்துட்டு

இன்னும் என்னதான் நாடுகிறாய்
எப்போதுதான் இதை முடிப்பாய்

ஒரு புழு போல
ஒரு பூச்சி போல
ஊர்வதற்காவது விடு
உலகம் ரொம்ப பெரியது

கடைசி இரக்கத்தையாவது
என்னில் காட்டு
காதலித்த நாட்களையாவது
எண்ணிப் பார்

எதிரியின் மீதான
கருணையையாவது காட்டு
இறுதி மரியாதையாவது செய்

என் பெண்மை மட்டுமல்ல
என் மென்மைகளும் வலிக்கிறது
கொஞ்சம் ஓய்வு கொடு

 - ஏ.எல். தவம் - 

(அநியாயமாக ஆண்களால் விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு இது சமர்ப்பணம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages