ஈழம் - எங்கள் இதயம் சுமந்தது - ஏ.எல். தவம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 26 July 2018

ஈழம் - எங்கள் இதயம் சுமந்தது - ஏ.எல். தவம்

ஈழம் - எங்கள் இதயம் சுமந்தது
ஏ.எல். தவம்

மொழியை புணர்ந்து
மனதைத் திறந்து
மண்ணை உணர்ந்து

ஈழம்
எங்கள் - கனவாய் 
கிடந்தது

போராட வந்தோம்
நாங்களும் துப்பாக்கியாகினோம்

அந்த இயக்கமென்று
இந்த இயக்கம் களைபிடுங்க

முன்னாள் போராளிகள்
முதுகில் குறிவைக்கப்பட்டோம்
முழுவதுமாய் துடைத்தெறியப்பட்டோம்

ஆனாலும்,
ஈழம் - எங்கள்
இதயம் சுமந்ததுதான்

சித்தாந்தங்கள் சிதைந்து
சுடுதிறனில் நம்பிக்கை வளர்த்து
ஏக இன - தனி நாடு 
அது எங்களுக்கே மட்டும் என்க

அப்போதும் வருந்தவில்லை
அதில் ஒன்றும் கவலையில்லை

எப்போதும் போலவே
எங்கள் இனம் தமிழ் என்றோம்

அப்போதும் சாய்த்தனரே
அதிலும் கொன்றனரே

வட புல
வேரோடு பிடுங்கி 
வேறாக்கி எறிந்தனரே

இரக்கம் - இன்னும் 
இருக்குதய்யா

எங்கள் இதயம் - இன்னும்
கசியுதய்யா

ஈழம் - எங்கள்
இதயம் சுமந்தது

எங்கள் - கனவாய் 
கிடந்தது

தமிழ் 
எங்கள் மொழி
தமிழர் - எங்கள் உறவு

உறவுகள் - அழிந்த 
அழுத - முள்ளிவாய்க்கால்
எங்கள் உணர்வுகளினதும்
நினைவுப் படுக்கைதான்

கனத்த மனதோடு 
கண்ணீர் விடும் 
கடைசி நாட்களின்
உயிர் பலிகள்

புராளாத இலட்சியத்தின் வித்தாகி

இன்னுமொரு புரட்சியில்
இருவரையும் இணைத்திடட்டும்

ஈழம் - எங்கள்
இதயம் சுமந்தது

மொழியை புணர்ந்து
மனதைத் திறந்து
மண்ணை உணர்ந்து

அவலங்களை நினைவுறுவோம்!

(முள்ளிவாய்க்கால் பேரவலம்; ஒரு முஸ்லிம் நினைவு கூர்கை)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages