*.மண்ட்டோ படைப்புகள்
: தமிழில் – ராமாநுஜம்
“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”
மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.
மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையான சொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.
இந்திய பிரிவனை பற்றியும் மதரீதியிலான அடிப்படை வாதிகளின் கோரத்தையும் கலவரத்தையும் இதைவிட படம் பிடித்து காட்ட இயலாது. மத்த சிறுகதைகள் படிக்கும் போது உண்மையை காட்டியிருப்பார்கள் ஆனால் இவரின் சிறுகதையை படித்தால் நம் சட்டையை பிடித்து யாரோ உலுக்கிய உணர்வு
இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை.... ஆரம்பித்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார். மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல, குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. உடல்கள் கலாச்சார குறியீடுகளின் தாங்கிகளாக மாற்றப்படுவதை மண்ட்டோவால் சகிக்க முடியவில்லை.... உடல்கள் மீது வரையப்படும் அடையாளங்கள், வெற்றுடலே அடையாளங்களின் தாங்கிகளாக மாற்றப்படுவது என்பவற்றை அவர் எழுத்துக்கள் தொடர்ந்து கேலி செய்கின்றன.
---------------------------------------------------------
* பிரபஞ்சன் கதைகள்[சிறுகதைகள்] - (மூன்றுபாகங்க
பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள். - எஸ். ராமகிருஷ்ணன்
-------------------------------------------------------------------
*கர்ப்பநிலம்
- குணா கவியழகன்
தொன்மமும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தமது கூட்டு வாழ்வைக் காத்துகொள்ள அரசு என்றும் அலகில்லாததால் அவைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை வாழ்வுப் போக்கினூடு விரிக்க முயல்கிறது இந்த நாவல். அவர்களின் வேரையும் விழுதையும் தேடுகிறது.
--------------------------------------------------------------------
லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால், ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வியாழன்,வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த நூல்களின் வாசிப்பு அனுபவத்தினை இங்கு கருத்திடலாம் .
Post Top Ad
Wednesday, 25 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment