*அம்பேத்கர்: இன்றும் என்றும்
- டாக்டர் அம்பேத்கர்
'அம்பேத்கர் இன்றும் என்றும்' ''அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன. அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்ப்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன.
தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார். சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே. தன் காலத்தின் விதிவிலக்காகவே அவர் செயலாற்றினார்.'' பல்வேறு விடயங்கள் பற்றி அவரது சிந்தனைகளின் விரிவான தொகுப்பே இந்த பெரிய நூல்.
------------------------------------
*பட்டினிப் புரட்சி
- பரிதி
இவ்வுலகில், கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான் ,
கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட பின்னர்தான்,
கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான்,
பணத்தை சாப்பிட முடியாது என்பதை
'நாம்' உணர்வோம்.
பசுமைப் புரட்சியின் உருவாக்கம் பற்றிய செய்தி உண்மையில் திடுக்கிட வைக்கிறது. பசுமைப் புரட்சி என்ற எண்ணம் உருவாகும் முன்னரே உலக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவை விட அதிகமான தானியங்கள் விளைந்து கொண்டு தான் இருந்தன. இரண்டாம் உலகப் போருக்காக அமைக்கப்பட்ட வேதிப் பொருள் தொழிற்சாலைகளை, போர் முடிந்த பின் என்ன செய்வது என்று யோசித்த போது, அதில் செய்யப்பட்ட முதலீடு இலாபம் ஈட்டாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக, அதை வேளாண்மையில் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உதித்திருக்கிறது. அதைப் பசுமைப் புரட்சி என்று அழைத்திருக்கிறார்கள்.
இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றிய எந்தவிதமான கவலையும் படாமல், பட்டினி கிடக்கும் மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் நடித்து அவர்களைக் காட்டி, தானிய உற்பத்தியை அதிகரித்து அவர்களுடைய பட்டினியைப் போக்குவதற்குத் தான் பசுமைப் புரட்சி என்று கதை சொல்லியிருக்கிறார்கள். இது மனித குலத்துக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள், அதைத் தொடர்பவர்கள் பட்டம் பதவிகளைப் பெற்று மிகவும் சொகுசாக வாழ்கிறார்கள்.
பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய போது, அது தவறானது என்றும், சுற்றுப் புறத்தை மாசு படுத்தும் என்றும் கூறியவர்களை (காந்தி மற்றும் பொதுவுடைமையாளர்களை) உதாசீனம் செய்து விட்டுத் தங்கள் வழியே தொடர்ந்தவர்கள், இன்று நடந்துள்ள கேடான தாக்கங்களைக் கண்ட பிறகும் மனம் வருந்துவது போலத் தெரியவில்லை. இச்செய்திகள் முதலாளித்துவ அறிஞர்கள் அளித்துள்ள புள்ளி விவரங்களைக் கொண்டே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தை அளிக்காத, ஒவ்வாத ஆற்றலை அளிக்கும் உணவு வகைகள் பெருகி வருவது ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல; வளர்ப்பு மிருகங்களுக்கும் அதே கதி தான். அதன் தொடர் விளைவாக அவற்றின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்குக் கூடுதல் கெடுதல்கள் விளைகின்றன. இந்நூலில் கூறப்பட்டுள்ள இச்செய்திகளை இந்நூலாசிரியர் கொடுத்திருக்கும் ஆதாரங்களில் இருந்து மட்டுமல்ல; நம் சொந்த அனுபவத்தில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.
இயற்கை உணவுகளை உண்டு கொண்டு இருந்த காலத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்ற நோய்கள் மிகச் சிலருக்கே இருந்தன. செயற்கை உரங்களினால் விளைந்த உணவை உண்டு கொண்டு இருக்கும் இக்காலத்தில் மிகப் பலரை, அதுவும் இளம் வயதிலேயே பாதிக்கின்றன. மேலும், இயற்கை உணவுகள் (இயற்கை உணவுகளை உண்ட மிருகங்களின் இறைச்சி உட்பட) உண்பதற்குச் சுவையாக இருந்தன. இப்பொழுது அவை சுவையாக இல்லை. இளைய தலைமுறையினர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால் முதியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இச்செய்தி இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
---------------------------------------------------------
லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால், ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வியாழன்,வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த நூல்களின் வாசிப்பு அனுபவத்தினை இங்கு கருத்திடலாம் .
Post Top Ad
Wednesday, 25 July 2018
அம்பேத்கர்: இன்றும் என்றும் -பவ்ஸர் மஹ்றூப்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment